search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அசாம் எம்பி"

    அசாம் மாநிலத்தில் பாஜகவைச் சேர்ந்த எம்பி சர்மாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால், கட்சியில் இருந்து விலகி உள்ளார். #AssamBJPMP #RPSharma
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் ஆளும் பாஜக சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. வெற்றி வாய்ப்பு உள்ள தகுதிவாய்ந்த வேட்பாளர்களை தேர்வு செய்து கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில், கட்சியின் மூத்த தலைவரும் தற்போதைய தேஜ்பூர் எம்பியுமான ஆர்.பி.சர்மாவின் பெயர் இடம்பெறவில்லை.

    இதனால் கடும் அதிருப்தி அடைந்த சர்மா, கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி உள்ளார். இத்தகவலை பேஸ்புக் மூலம் வெளியிட்டுள்ளார்.

    அதில், ‘ஆர்எஸ்எஸ், விஎச்பி அமைப்பில் 15 ஆண்டுகளும், பாஜகவில் 29 ஆண்டுகளும் பணியாற்றிய நான் இப்போது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன். மாநில பாஜக குழு அனுப்பிய வேட்பாளர் பரிந்துரை பட்டியலில் என் பெயரை சேர்க்காமல் என்னை அவமதித்துவிட்டார்கள்’ என சர்மா குறிப்பிட்டுள்ளார்.

    பாஜகவில் இருந்து விலகிய அசாம் எம்பி சர்மா - டாக்டர் ஹிமந்த பிஸ்வா சர்மா

    செல்வாக்கு மிக்க மாநில அமைச்சரான டாக்டர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் பெயர் வேட்பாளர் பரிந்துரை பட்டியலில் உள்ளது. அவர் தேஜ்பூர் தொகுதியில் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே பாஜகவில் இருந்து விலகிய சர்மா, தேசிய கட்சியில் சேர உள்ளதாக கூறி உள்ளார். அவர் காங்கிரசில் சேர்ந்து தேஜ்பூர் தொகுதியில் போட்டியிடலாம் என தெரிகிறது. #AssamBJPMP #RPSharma

    ×